Breaking News

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை | தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு அதேசமயம் அதிமுக பொது செயலாளர் முடிவை வெளியிடாமல் நிறுத்தி வைக்கலாம்  என உயர்நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. 

வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் எனவும்,  தேர்தல் முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டனர். மார்ச் 24-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறினர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback