Breaking News

ஒரு வீட்டிற்க்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே | ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்பது தவறான செய்தி - அமைச்சர் செந்தில் பாலாஜி

அட்மின் மீடியா
0

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. இது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை எந்த பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவித்துள்ளார்

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆதார் இணைக்க அவகாசம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முடிந்தது. 

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக ஒரே வீட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும்

ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் ஒரு மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும்.ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகித பட்டியல் படி ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும். மேலும் நுகர்வோர் அந்த மின் இணைப்பை இணைப்பதற்கு முன்வரவில்லை என்றால் அதை 1டி கட்டணும் விகிதப்பட்டியலாக மாற்ற வேண்டும். 

சிலர் ஒரே வீட்டில், அண்ணன்- தங்கைகள், அக்காள்- தம்பிகள், தந்தை- மகன், தந்தை- மகள் என்று தனித்தனி குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ, குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், இதுபோன்ற குடும்பங்கள் உள்ள முறையாக பிரிக்கப்பட்ட குடியிருப்பில் அங்கு மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால், அம்மாதிரி இடங்களில் தனி ரேஷன் கார்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்

ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றம் செய்ய வேண்டும்.

ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1ஏ-வில் கட்டண விகித பட்டியலாக இருக்க வேண்டும். இது முறையாக தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும்.இதன் நோக்கம் '100 யூனிட் மானியம்' முறையாக இருக்க வேண்டும் என்பதற்காவே இந்த உத்தரவு என்று, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. என செய்திகள் பரவியது



இந்நிலையில் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

ஒரே வீட்டில்/குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றிணைத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதியப்பட்ட கருத்து குறித்த அறிக்கை சமர்ப்பித்தல்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 விழு காட்டிற்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார்எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின்இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 09.09.2022 அன்று வெளியிடப்பட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில்/குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்னிணைப்புகளை 

ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின்னிணைப்புகளைப் பொதுப்பயன்பாட்டிற்கான மின்னிணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு/வீதப்பட்டியல் மாற்றும் பணி (Tariffconversion) தொடங்க கூடுதல் கால அவகாசம்  கோரப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவிப்பு:-

https://twitter.com/V_Senthilbalaji/status/1633119374360948738

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback