Breaking News

தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம் -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம் -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் 

தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் தமிழை பயன்படுத்தாமல், ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் வணிக நிறுவன பெயர் பலகைகளில், அவரவர் தாய் மொழியே முதன்மையாக இடம் பெற்றுள்ளன.தமிழகத்தில் அரசு அலுவலக பெயர் பலகைகளில் ஆங்கிலம் பெரிய எழுத்துக்களாகவும், தமிழ் சிறிய எழுத்துக்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழக அரசின் ஆணைப்படி, 

அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், நிறுவனங்களில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் அரசாணை படி, 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள்தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும். என தமிழ்நாடு அரசு 1982 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பில், 'தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் 50 ரூபாய் விதிக்கப்படுகிறது. இதை மிக குறைந்த தொகை என்பதால் எளிதில் செலுத்தி விடுகின்றனர். சட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.அபராத தொகையை உயர்த்தும் பரிந்துரை மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback