பெண் வழக்கறிஞரை தாக்கிய பெண் நீதிபதி என பரவும் வீடியோ உண்மை என்ன Female Advocates Fight Video
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நீதிமன்றத்தில் கண்ணியமாக இளைய பெண் வழக்கறிஞர் நடந்துகொள்ளவில்லை என்று நீதிபதி இறங்கி வந்து அந்த பெண் வழக்கறிஞரை தாக்கும் காட்சி. இது மகாராஷ்டிராவில் நடந்தது. என்னே நீதிமன்ற மாண்பு👇என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 28.11.2022 ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தில் இரு பெண் வழக்கறிஞர்கள் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.அந்த வீடியோ நிலை தகவலில், நீதிமன்றத்தில் கண்ணியமாக இளைய பெண் வழக்கறிஞர் நடந்துகொள்ளவில்லை என்று நீதிபதி இறங்கி வந்து அந்த பெண் வழக்கறிஞரை தாக்கும் காட்சி. இது மகாராஷ்டிராவில் நடந்தது. என்னே நீதிமன்ற மாண்பு👇என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த வீடியோ எங்கு நடந்தது எனவும், எப்போது நடந்தது எனவும் தகவல் இல்லை, ஆனால் பலரும் ஷேர் செய்து கொண்டு உள்ளார்கள் உண்மை தெரியாமல்
அந்த வீடியோவில் உள்ளவர்கள் நீதிபதியும் வழக்கறிஞரும் என பொய்யாக ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த சம்பவம் 28.11.2022 அன்று உத்திரபிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மற்ற வழக்கறிஞர்கள் ஓடி வந்து விலக்கியும், இந்த இரு பெண்களும் முடியை பிடித்து ஒருவரையொரு அடித்துக் கொண்டு சண்டைப்போட்டனர்.
இது குறித்து நீதிமன்றத்தில் காவலில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடி வந்த போலீசார் இரு வழக்கறிஞர்கள் பெண்களை விலக்கிவிட்டனர். ஒரு பெண் வழக்கறிஞர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் என நமக்கு தெரிய வந்தது
முடிவு:-
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி