மதம் மாறியதால் சிபிஎம் MLA ராஜாவின் வெற்றி செல்லாது கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்
மதம் மாறியதால் சி.பி.எம் எம்.எல்.ஏ. ராஜாவின் வெற்றி செல்லாது..! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்
கடந்த 2021ம் ஆண்டு கேரளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் சி.பி.எம் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. அதில் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தனி தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் ராஜா (A. Raja) போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி.குமாரைவிட 7,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்
இந்நிலையில் தனித் தொகுதியான தேவிகுளத்தில் ராஜா கிறிஸ்தவர் என்பதை மறைத்து தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமார், கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் :-
கிறிஸ்தவ பெற்றோர் ஆண்டனி மற்றும் எஸ்தர் ஆகியோருக்கு பிறந்த ராஜா, எப்போதும் கிறிஸ்தவராகவே வாழ்ந்துள்ளார். ராஜா தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றவர், ராஜாவின் மனைவி ஷைனிப்ரியாவும் ஒரு கிறிஸ்தவர், அவர்களின் திருமணம் கிறிஸ்தவ நம்பிக்கையின்படி நடந்தது என பல ஆதாரங்களை தாக்கல் செய்திருந்தார்
வழக்கை விசாரித்த நீதி மன்றம் தாக்கல் செய்த ஆவணங்களையும் ஆய்வுசெய்தது இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது அதில்
ராஜா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் கிடையாது. எனவே, அவர் தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது" என உத்தரவிட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் வேட்பாளரான குமார் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என செய்த மனுவை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜா எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டசபையில் சிபிஎம் உறுப்பினர்களின் பலம் 99ல் இருந்து 98 ஆக குறைந்தது. சிபிஎம் மற்றும் ராஜா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
Tags: இந்திய செய்திகள்