வாட்ஸப் புது அப்டேட் இனி வாய்ஸ் மெசஜையும் ஒரு முறை மட்டுமே கேட்கும் படி View Once அனுப்பலாம் WhatsApp audio view once
வாட்ஸப் நிறுவனம் அடிக்கடி தன் பயனாளர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகின்றது, தற்போது வாட்ஸப் நிறுவனம் தன் WA Beta Info என்ற டிவிட்டட் பக்கத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்காங்க
அதாவது நாம எப்படி ஒரு நபருக்கு புகைப்படம் அனுப்பும் போது View Once முறையில் அனுப்புகின்றோமோ அதேபோல் இனி ஆடியோ மெசஜையும் ஒரு முறை மட்டுமே கேட்கும் முறையில் அப்டேட் செய்யும் பணி நடைமுறைக்கு வர உள்ளது என அறிவித்துள்ளார்கள்
இந்த புதிய அப்டேட் வந்துச்சுனா நீங்க View Once முறைல உங்களோட ஆடியோவும் மற்றவர்களுக்கு ஷேர்பண்ணிக்கலாம் அவர்கள் ஒரு முறை மட்டும் தான் அதை கேக்க முடியும், மேலும் நீங்கள் அனுப்பும் அந்த ஆடியோவை அவர்கள் Record அல்லது Download என்று எதும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது சோதை முறையில் உள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
View Once முறை என்றால் என்ன:-
வியூ ஒன்ஸ் (View Once) எனப்படுவது வாட்ஸப்பில் ஒரு முறை மட்டுமே காணும் வகைஆகும்
வாட்ஸப்பில் நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் புகைப்படங்களை அதன் பெருநரால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதன் பிறகு, அவை தானாகவே பெறுநரின் சாட்டில் இருந்து நீக்கப்படும் இந்த வசதி தற்போது ஆடியோவிற்க்கு வர உள்ளது
Tags: தொழில்நுட்பம்