மஹாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் 13 பேர் பலி முழு விவரம்
மஹாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் 13 பேர் பலி முழு விவரம்
மகாராஷ்டிரா பூஷன் விருது விழா
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவிமும்பை நகரில் நேற்று மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிடோர் பங்கேற்றனர்.
வெயில் தாக்கத்தால் பலி:-
இந்த விழா மிக பிரம்மாண்டமாக திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது. திறந்தவெளி மைதானத்தில் வெகுநேரமாக பொதுக்கூட்ட விழா நடைபெற்றதால், அங்கிருந்த பலருக்கும் வெயில் உஷ்னத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்
மகாராஷ்டிராவில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தநிலையில் பல மணிநேரம் இடைவிடாமல் தொடர்ந்து வெயிலில் பொதுமக்கள் அமர்ந்திருந்ததால் பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனர்
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளார்கள் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்கள் இரங்கலையும் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
பீகார், ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த 3 மாநிலத்திற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
அதேபோல் நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்