ஏப்.20 ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை - புதுச்சேரி அமைச்சர்
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் சுகாதார துறை அமைச்சர் உடனான ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம்,
புதுச்சேரியில் கோடை வெயில் தாக்கம் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை 24.04.2023ஆம் தேதி தொடங்கி 28.04.2023 வரை நடைபெறுவதாக கல்வித்துறையால் சுற்றறிக்கை 02.03.2023 அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது இந்நிலையில்1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வானது 11.04.2023 முதல் தொடங்கி 19.04.2023 வரை தேர்வு நடைபெறும் என்றும், 20.04.2023 முதல் 31.05.2023 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Tags: புதுச்சேரி செய்திகள்