Breaking News

வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ 76 அதிரடி குறைவு.!

அட்மின் மீடியா
0

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 76 குறைந்து ரூ.2,192.50-க்கு விற்பனை ஆகிறது



19 கிலோ எடை கொண்ட இந்த வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் இதுவரை ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.இந்த நிலையில், தற்போது ரூ. 76 குறைந்து ரூ.2,192.50-க்கு விற்பனை ஆகிறது. 

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஏப்ரல் மாதம்  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது. இந்த மாதம் 76 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் ரூ. 2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback