Breaking News

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

2022ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த  அனுமதி கோரிய நிலையில் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை


அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக அனுமதி வழங்க கோரி  சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அதில்  44 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம், அந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, பேரணி நடத்துவதற்க்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதிவழங்கியது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது அதில்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதியளித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback