சூடான் நாட்டில் நடப்பது என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பழமையான நாடுகளில் ஒன்றான சூடான் பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. 2011 ம் ஆண்டு பொது வாக்கெடுப்பின் மூலம் தெற்க்கு சூடான் பகுதி தனி சுதந்திர நாடாக மாறியது பாதி நிலப்பரப்பு தெற்கு சூடானாக தனிநாடாக மாறிவிட்டது. மீதம் இருக்கும் பாதி நிலப்பரப்பு தான் தற்போது சூடானாக உள்ளது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
உமர் அசன் அகமது அல்-பசீர் சூடானின் ஏழாவது அரசுத்தலைவராகவும், தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் சூடானிய இராணுவத்தில் படைத்துறைத் தலைவராக இருந்தார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் சாதிக் அல்-மகுதியின் ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார் சூடானை ராணுவ ஆட்சி மூலமாக கைப்பற்றிய உமர் அல் பஷீர் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் உமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்க்கிடையில் ராணுவத்தின் ஜெனரல் அல் புர்ஹான் மற்றும் ஆர்எஸ்எப் ஜெனரல் டகாலோ புரட்சி செய்து ஆட்சியை பிடித்தனர்.இதையடுத்து புர்ஹான் ஆட்சியின் தலைவராகவும், ஆர்எஸ்எப் தலைவர் டகாலோ ஆட்சியின் துணை தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். உமர் கைது செய்யப்பட்டு இப்போதுவரை சிறையில் இருக்கிறார்.
தற்போது என்ன பிரச்சனை:-
தற்போது சூடானில் நடக்கும் யுத்தம் இரு நாடுகளுக்கு இடையே அல்ல;
சொந்த மக்களுக்குள் நடக்கிறது.
ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடக்கிறது.
அதாவது ராணுவத்துக்கும், அதன் கிளையான துணை ராணுவத்திற்கும் இடையே தான் சண்டை நடக்கிறது. புரியும் படி சொல்வதனால் ராணுவ தளபதிக்கும் துணை ராணுவ தளபதிக்கும் தான் சண்டை
சூடான் நாட்டு ராணுவம் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் துனை ரானுவப்படைக்கும் இடையே இந்த மோதல் நடக்கிறது
ராணுவத்தின் ஜெனரல் அல் புர்ஹான் மற்றும் ஆர்எஸ்எப் ஜெனரல் டகாலோ இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
சூடானில் உமர் ஆட்சியை கவிழ்த்து ரானுவ ஆட்சியை மீண்டும் கைப்பற்றியபோது இவர்கள் இரண்டு தரப்பும் ஒன்றாகவே இருந்தனர்.
ஆர்எஸ்எப் அமைப்பை ராணுவத்துடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதில் இருந்து இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிகப்பெரிய உள்நாட்டு போராக மாறி உள்ளது.
சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர்.
1800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரியவந்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்