நடைபயிற்சி சென்ற நபரை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
உத்தரபிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேற்று காலை நடைபயிற்சி சென்ற நபர் ஒருவரை 6 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் வசித்து வரும் ச வயதான டாக்டர் சப்தர் அலி அருகில் உள்ள சர் சையத் அருங்காட்சியகத்தில் உள்ள தோட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது சுமார் 7 நாய்கள் அவரைத் தாக்கின. அவரை கீழே சாய்த்து உடலில் பல பாகங்களில் மிகவும் கோரமாக கடித்து குதறியது இதில் சம்ப இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்
பல்கலை கழக பூங்காவில் ரத்தவெள்ளத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு பல்கலைகழக சிசிடிவிகளை ஆராய்ந்ததில் அவரை தெருநாய்கள் கடித்து கொன்றது தெரிய வந்தது இந்த சோக சம்பவம் தற்போது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ