கர்நாடக அரசியல் பரபரப்பு | பாஜக முன்னாள் முதல்வரும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
கர்நாடக தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கர்நாடகா சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை என்பதால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால் பாஜகவில் இருந்து தொடர்ந்து பலர் விலகி வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்தார்.
இந்நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றியும், பாஜக தன்னை நடத்திய விதம் வேதனை அளிக்கிறது. இதனால் எனது எம்எல்ஏ பதவி மற்றும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
முன்னாள் முதல்வரும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் கர்நாடகா மாநிலத்தின் வலுவான லிங்காயத்து தலைவராகவும் இருக்கும் ஜெகதீஷ் ஷட்டர் இன்று காலை பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற ஜெகதீஸ் ஷெட்டர் அகில இந்திய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் வைக்கமாட்டார். நாங்கள் எந்த பொறுப்பும் வழங்க போவதில்லை, கட்சியின் கொள்கைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்றார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்