Breaking News

பறவை மோதியதால் நடுவானில் பற்றி எரிந்த பயணிகள் விமானம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பறவை மோதியதால் தீப்பிடித்து எரிந்த நிலையில், அவசர அவசரமாக தரையிறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 


அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் இருந்து பினிக்ஸ் நகரை நோக்கி நேற்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது

விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே நடுவானில் விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியதால் என்ஜினில் தீ பற்றியது, இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அலறி பதற்றமடைந்தனர். 

விமானி உடனடியாக அருகில் உள்ள ஒஹியோ விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

நடுவானில் விமான என்ஜினில் தீ பற்றி எரிந்த நிகழ்வை இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/TheCharlesDowns/status/1650213150505984002

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback