Breaking News

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்சின் உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் விண்ணில் வெடித்துச் சிதறிய வீடியோ

அட்மின் மீடியா
0

உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என கருதப்படும் Starship விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது



ஸ்டார்ஷிப்

உலக பணக்காரரும், முன்னனி தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிக பெரிய ராக்கெட் ஒன்றை உருவாகியுள்ளது.  400 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. இந்த ராக்கெட்டிற்கு ஸ்டார்ஷிப் என்று பெயரிடப்பட்டது.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கான முதற்கட்ட முயற்சியை எடுத்துள்ளது.சுமார் 250 டன் எடைகொண்ட இந்த ராக்கெட் 100 பேர் அளவிற்கு கொண்டு செல்லும் திறன் உடையதாகும். 

விண்வெளியில் சுற்றுப்பயணம் செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட் மூலம் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. 

அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களில் திடீரென ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. ஹவாய் தீவு அருகே உள்ள பசிபிக் கடலில் இது விழுந்தது. 

ஸ்பேஸ் எக்ஸ்' விஞ்ஞானிகள் கூறுகையில் எதிர்பார்த்த முறையில் சோதனை நடைபெறவில்லை எனவும், தவறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அடுத்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ராக்கெட் விண்ணில் வெடித்துச் சிதறிய வீடியோ

https://twitter.com/CollinRugg/status/1649047453747011584

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback