12ம் வகுப்பிற்க்கு பிறகு என்ன படிக்கலாம் உங்கள் சந்தேகங்களை கேட்க தொடர்பு எண் அறிவித்த தமிழக அரசு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு நாளை வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின், உயர்கல்வியில் சேர்வதற்கு ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவ மாணவிகள் இந்த 14417 என்ற எண்ணில் எந்த கல்லூரியில் சேருவது, எந்த படிப்பில் சேரலாம், உயர்கல்விக் கடன் எப்படி பெறுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுகு விளக்கம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்தவுடன் என்ன படிப்பது என்ற சந்தேகம் அனைத்து மாணவர்களுக்கும் எழும் இதற்குத் தீர்வு காண, மாணவர்களுக்கு என்று உயர்கல்வி வழிகாட்டிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டிக் குழுவில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்தக் கல்லூரிகளில் படிக்கலாம். அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஆகிய வழிமுறைகள் வழங்கப்படும்.
மேலும், உயர்கல்வி படிக்கக் கல்விக்கடன், உதவித்தொகை ஆகியவற்றை எப்படிப் பெறுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும்.
படிப்பிற்கு ஏற்ற அரசுத் திட்டங்களில் உதவித்தொகை பெற்றுப் பயன்பெறுவது குறித்த தகவல்களும் இந்த குழு மூலம் வழங்கப்படும்.
தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் கூட இந்த குழுவிடம் தேவையான ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம்
மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உரிய வழிகாட்டுதலும் ஆலோசனையும் வழங்கப்படும்
மாணவர்கள் 14417 என்ற எண்ணிற்குக் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனை பெறலாம்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்