பெற்றோர்களே எச்சரிக்கை:- இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது ரயிலில் அடிபட்டு 16 வயதே ஆன முகமது சர்பராஸ் பரிதாப பலி.!!
ஹைதராபாத்தில் ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்களுக்காக வீடியோ பதிவு செய்யும் போது ஓடும் ரயிலில் அடிபட்டு 16 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள சனாதநகரில் முகமது சர்பராஸ் தனது இரண்டு நண்பர்களுடன் ஜும்மா தொழுக்கை சென்றுள்ளார் அப்போது அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக தண்டவாளத்திற்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்துள்ளர். அப்போது வந்த ரயிலில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த சர்பராஸ் சம்பவ இடத்திலேயே ரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்