மக்களே வெளியே வராதீங்க 18 ம் தேதி வரை வெயில் சுட்டு எரிக்க போகுது எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்.!!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம், வெப்ப அழுத்தம் Heat Stress காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோக்கா புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று
சென்னையில் வெப்பம் 40 டிகிரி வரையில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.26 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்