தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி Private Candidate Download Provisional Marksheet
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தனிதேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் டவுன்லோடு செய்யலாம்
மாணவ மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து வழங்க உள்ளனர். மதிப்பெண் பட்டியலில் பிழை இருந்தால் இயக்குநரகத்துக்கு தெரிவிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அசல் மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. மேலும் கடந்த மே 8-ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளி கல்விதுறை அமைச்சார் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு துறை தெரிவித்துள்ளது
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அந்த அந்த பள்ளிகளில் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் அளித்துதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பித்த தேர்வு மையங்களில் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் டவுன் லோடு செய்ய:-
https://apply1.tndge.org/senior-secondary-private-provisional-marksheet-02092021
Tags: கல்வி செய்திகள்