கடலுக்கு அடியில் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சாலை கண்டுபிடிப்பு! ஆழ்கடல் வீடியோ பார்க்க
குரோஷியாவின் கோர்குலா தீவின் கடலில் 7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, கடலுக்கு அடியில் சென்று மத்திய தரைக்கடல் அடியில் மறைந்திருந்த 7000 ஆண்டுகள் பழமையான கற்சாலையை கண்டுபிடித்துள்ளனர்
குரோஷியாவின் ஜாதார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது பேஸ்புக் பதிவில், தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் நடந்து சென்ற சாலை நான்கு மீட்டர் அகலத்துடன் கவனமாக அடுக்கப்பட்ட கல் அடுக்குகளால் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. ஹவார் கலாச்சார மக்கள் வாழ்ந்த கற்கால குடியேற்றத்தின் ஒரு பகுதியாக இந்த சாலை உள்ளது, அவர்கள் கடற்கரை மற்றும் அருகிலுள்ள தீவுகளில் சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் வாழ்ந்த திறமையான விவசாயிகள் ஆவார்கள்
இந்த வியக்க வைக்கும் கண்டுபிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கற்கால சாலையானது கிமு 4,900க்கு முந்தையதாக இருக்கலாம், அதாவது சுமார் 7,000 ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ