நடுவானில் திடீரென திறந்த விமானத்தின் கதவு வைரல் வீடியோ Asiana Airlines A321
தென்கொரியாவில் நடுவானில் திடீரென திறந்த விமானத்தின் கதவு.. மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தென்கொரியாவில் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் திறந்து கொண்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
விமானம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.இதனால் அதில் பயணித்த விமான பயணிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில் விமானத்தின் முன்பக்க கதவு திறந்திருப்பதை பார்க்க முடிகிறது. விமான கதவு திறந்தது காற்று உள நுழைய ஆரம்பிக்கின்றது விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் கூச்சலிட்டனர். சம்பவத்தை தொடர்ந்து பைலட் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்கும் முயற்சியை மேற்கொண்டார்.
விமானத்தில் காற்று அதிகமாக இருந்ததால் அதில் இருந்த பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்!
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ