ஆவினில் வைட்டமின் ஏ மற்றும் டி சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம் முழு விவரம்
ஏ மற்றும் டி வைட்டமின் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் ஆவினில் இன்று முதல் அறிமுகமாகியுள்ளது.
ஆவின் நிறுவனம் நீலம், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. மேலும் வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டதொடரில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் ஆவினில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின் ஏ மற்றும் டி அதிகரிப்பதுடன் கண் பார்வையை மேம்படுத்தி எலும்புகளை உறுதி படுத்துகிறது. வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பசும்பால் பர்ப்பிள் நிற பால் பாக்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பாலில் கொழுப்பு சத்தும் 3.5 சதவீதம் என்ற அளவில் நிறைந்து இருக்கும்.
Tags: தமிழக செய்திகள்