விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்! முழுவிவரம்
நாளை முதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன.
இதில் 8, 36,593 மாணவர்கள் தேவெழுதிய நிலையில், 7,55,451 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று காலை 11 மணிமுதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும் மேலும், விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும் என்றும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியாக வரும் 12-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் நகலுக்கு ரூ275 ரூபாயும், மறுகூட்டலுக்கு ரூ205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ305 கட்டணமாக செலுத்த வேண்டும்
முழு விவரங்கள் தெரிந்து கொள்ள:-
https://drive.google.com/file/d/1bDslxleCAM6J2vJcnpxaTJ1_bsa20Ffg/view?usp=sharing
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்