கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெண்ணை சுட்டு கொலை செய்த முஸ்லீம்கள் என பரப்பப்படும் வதந்தி உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருந்த பெண் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்..என்ன கொடுமையா இருக்கே? என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் நடத்திய தெரு நாடகம் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
கடந்த 08.09.2017 அன்று கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI Kalikavu MC எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள வீடியோவில் கெளரி லங்கேஷ் கொலை நடந்தது எப்படி என பதிவிட்டுள்ளது
கம்யூனிஸ்ட் கட்சியினரால் நடத்தப்பட்ட நாடகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வீடியோ 2017ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலான போதே அந்த அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம் செய்தி ஊடங்களிலும் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
கௌரி லங்கேசு என்பவர் ஒரு இந்தியப் பெண் பத்திரிகையாளரும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் லங்கேசு பத்ரிகே என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தார்.
முற்போக்குக் கொள்கையுட- இவர் மதம், சாதி, இந்துத்துவாக் கொள்கைக்கு எதிராக எழுதி வந்தார். அதனால் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. 2017 செப்டம்பர் 5 ஆம்தேதி பெங்களூருவில் அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
அந்த கொலை எப்படி நடந்தது என தான் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI பொது மக்கள் மத்தியில் நடத்தி காட்டிய தெருமுனை நாடகம் ஆகும்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்:-
Tags: FACT CHECK மறுப்பு செய்தி