கர்நாடகாவில் சபாநாயகராக முதல் முறையாக இஸ்லாமியர் யு.டி.காதர் பதவியேற்க உள்ளார்!
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூ.டி. காதர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது
அதனை தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.இந்நிலையில், புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்த யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்து சபாநாயகர் பதவிக்கு காதர் வேட்பு மனு தாக்கல் செய்தார் அவருடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உடன் இருந்தனர்.
கர்நாடக சட்டப் பேரவையில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் சபாநாயகராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
காதர் ஐந்தாவது முறையாக எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த பாஜக ஆட்சியில் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தார்
மேலும் பாஜக மற்றும் குமாரசாமி கட்சியும் எந்த வேட்பாளர்களையும் நிறுத்தப் போவதில்லை என்பதால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கர்நாடகாவில் நாளை காதர் கர்நாடக சட்டசபை சபாநாயகராக பொறுப்பேற்கிறார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்