கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடையை கொண்டு வந்த கல்வி அமைச்சர் பி. சி. நாகேஷ் தோல்வி
கர்நாடக மாநிலத் சட்டமன்றத் தேர்தலில் திப்துர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் காங்கிரஸ் வேட்பாளர் ஷதாக்ஷாரியை விட 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் இன்று 36 மையங்களில் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் உள்ள அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது
கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டம் செய்தனர்.ஹிஜாப் மீதான தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு அரசுக்கு சாதகமானதாவே அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிய அனுமதி வழங்கக்கோரி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இத்தடையை கொண்டு வந்த கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் இந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட பி. சி. நாகேஷ் 53,754 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் ஷாதக் ஷாரி 71, 415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சபாநாயகர் உட்பட 14 அமைச்சர்கள் தோல்வியடைந்து உள்ளார்கள்
1. கிருஷ்ணராஜ் பேட்: கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர்
2. ஹிரேகேரு தொகுதி: பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர்
3. சிக்கநாயகனஹள்ளி தொகுதி: ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர்
4. சிர்சி தொகுதி: சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி
5. திப்தூர் தொகுதி: பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்
6. நாவல்குண்ட் தொகுதி: சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர்
7. முத்தோள் தொகுதி: கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர்
8. சன்னபட்னா தொகுதி: ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர்,
9. பெல்லாரி ஊரகம்: பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர்,
10. பீளகி தொகுதி: முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர்
11. வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் - 2 இடங்களிலும் தோல்வி.
12. சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி: டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர்
13. எல்புர்கா தொகுதி : ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர்
14. ஒசகோட்டை தொகுதி: எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்