Breaking News

ஆன்லைனில் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் விற்பனைக்கு மத்திய அரசு தடை..!

அட்மின் மீடியா
0

கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்யும் ஐந்து இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறியதைக் கருத்தில் கொண்டு, கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்யும் முதல் ஐந்து ஆன்லைன் விற்பனைத் தளங்களுக்கு தடை விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்களில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பிற்க்கு சீட் பெல்ட் அணியவேண்டும் என்பது போக்குவரத்து விதியாகும் மேலும் தற்போது அனைத்து கார்களிலும் சீட் பெல்ட் அணியாவிட்டால் பீப் சத்தம் ஏற்படும். நாம் சீட் பெல்ட் அணிந்தால் தான் அந்த பீப் சத்தம் நிற்க்கும்

ஆனால் தற்போது இந்த சீட் பெல்ட் அணியாவிட்டல் வரும் அலாரத்தை நிறுத்த ஸ்டாப்பர் எனப்படும் கிளிப்புகள் ஆன்லைனில் வந்துள்ளது அந்த கிளிப்பை நாம் சீட் பெல்ட் லாக்கில் மாட்டிவிட்டால் பீப் சத்தத்தை அமைதிப்படுத்தி விடுகின்றன. இதனால் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலும் பீப் சத்தம் ஏற்படாததால் பயணிகள் சீட் பெல்ட் அணிந்தது போல எண்ணி பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்பர்களை விற்பனை செய்யும் Flipcart, Amazan, Meesho, Snapdeal, Shopclues உள்ளிட்ட முதல் ஐந்து இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் விதி 138-ன் படி சீட் பெல்ட் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், சீட் பெல்ட் அணியாதபோது இந்த கிளிப்புகள் பீப்பை நிறுத்தி பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback