Breaking News

Google Pay வில் உங்கள் கிரெடிட் கார்டையும் இணைக்கலாம் எப்படி முழு விவரம் add credit card google pay

அட்மின் மீடியா
0

கூகுள் பேயில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பேயில் வங்கி கணக்கு இணைக்கும் போது உங்கள் ஏடிஎம் டெபிட் கார்டு பயன்படுத்தி மட்டுமே இணைத்து வந்தோம். இந்தநிலையில் கிரெடிட் கார்டு இணைக்கும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கூகுள் பேயில் ரூபே கிரெடிட் கார்டு இணைக்க நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (என்சிபிஐ) ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பயனர்கள் இப்போது கூகுள் பேயில் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து பணம் செலுத்தலாம். 

நீங்கள் கூகுள் பேவில் தற்போது விசா மற்றும் மாஸ்டர் நிறுவன கிரெடிட் கார்டுகளை  இணைக்க முடியாது. ரூபே கார்டு மட்டுமே இணைக்கமுடியும்

மேலும் கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ,​​ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே மூலம் இணைக்கலாம்

கூகுள் பேயில் ரூபே கிரெடிட் கார்டு இணைப்பது எப்படி:-

முதலில் Google Pay செயலியை ஓபன் செய்து செட்டிங் பக்கத்திற்கு செல்லவும்.

அதில் Settings & Payment என்பதை தேர்வு செய்து அதில் கிரெடிட் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்ததாக Credit card number, Expiry Date, PIN Number ஆகியவற்றை பதிவிட வேண்டும்.

அடுத்ததாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பி அதனை உள்ளிட்டு செய்யவும்.

உங்களது ரூபே Credit card கூகுள் பேயுடன் இணைக்கப்பட்டு விடும்.

கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டு பில்களைச் செலுத்துதல் எப்படி:-

Google Pay ஆப்ஸில் இருக்கும் ‘வழக்கமான பேமெண்ட்டுகள்’ பிரிவின் மூலம் இப்போது உங்கள் கிரெடிட் கார்டின் பில்லைச் செலுத்தலாம்.

Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.

உங்கள் கிரெடிட் கார்டுடன் தொடர்புடைய பேங்க்கைத் தேர்ந்தெடுக்கவும்

அதன் பிறகு கிரெடிட் கார்டு பில் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் கிரெடிட் கார்டு எண்ணின் முதல் 12 இலக்கங்களை உள்ளிடவும்.

கார்டு எண்ணைச் சரிபார்க்கவும்.பேமெண்ட்டை நிறைவுசெய்ய, நீங்கள் செலுத்த வேண்டிய தொகையையும் உங்கள் UPI பின்னையும் உள்ளிடவும்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback