வித்யாலட்சுமி கல்விகடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் vidya lakshmi education loan
அட்மின் மீடியா
0
பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றும் இளங்கலை,முதுகலை பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற எங்கும் அலையவேண்டாம், வங்கிக்கு சென்று வங்கி வாசலில் மாணவர்கள் அல்லது பெற்றோர் காத்திருக்கவேண்டாம்.
வித்யா லட்சுமி கார்யகிரம்
கல்விகடனுக்கு என தனியாக பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம் (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மேலும் இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் படிக்க ரூ.7.5 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் படிக்க ரூ.15 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
கல்விக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். சம்பந்தப்பட்ட வங்கி வழங்கிய வட்டி விகிதத்தில் உங்களுக்கு விருப்பமான வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதே போல் எந்த ஒரு கடனாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் நாம் அதை திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படி திருப்பிச் செலுத்தும் கால அளவை நம் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பது நல்லது
இனிமேல் 12-ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை எளிய மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவ பட்டப்படிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்கவும் கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த போர்டல் மூலம் இதுவரை 36 வங்கிகள்இணைந்துள்ளது
பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்' எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து விட்டால் போதும்
உங்கள் ஊர், நீங்கள் விரும்பும் படிப்புக்கு எந்தெந்த வங்கிகளில் சிறப்புச் சலுகைகள் உள்ளன என்று உங்களுக்கான வங்கியைப் பரிந்துரை செய்வார்கள்.
மேலும் கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் திரும்பச் செலுத்துவதற்கான விதிமுறைகள் போன்ற அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
மேலும் ஆன்லைனில் தங்கள் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கலாம், அதேசமயம் உங்களுக்கு அந்த வங்கி கல்வி கடன் வழங்க மறுத்தால் அந்த இணையதளத்திலேயே புகாரும் அளிக்கலாம்
இதில் மொபைல் எண்,இ-மெயில் முகவரி,மாணவர் பெயர்,தந்தை பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சமர்பியுங்கள்
அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியில் உறுதிப்படுத்தல் இணைப்பை பெறுவீர்கள்.
அடுத்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட உறுதிப்படுத்தல் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்ததாக பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, லாக்-இன் செய்து உள் நுழையுங்கள்
அடுத்ததாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள் தங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
பின்பு எந்தத் துறையைச் சார்ந்த படிப்பு, எத்தனை வருடப் படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் தேவை உள்ளிட்ட தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
இதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறுந்தகவல் வரும்.
அதன் பிறகு, கல்விக் கடன் விண்ணப்பித்ததுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து விண்ணப்பமானது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். பிறகு, வங்கி அதிகாரி கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார். அல்லது நீங்கள் நேரிலும் செல்லலாம்