1200 முதலீடு செய்தால் 20 நாளில் 1500 கொடுக்கப்படும் என மார்டன் மாமி யூடியூப் சேனல் மூலம் மோசடி 3 பேர் கைது modern mammi arrest

அட்மின் மீடியா
0

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா இவர் கடந்த 2020 ம் ஆண்டு மாடர்ன் மாமி என்ற யூட்யூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த சேனலை சுமார் 1.5 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

 


இவர் தன் சேனலின் உள்ள ஃபாலோயர்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால், 20 நாட்களில் ரூ.1500 தருவதாகக் கூறி விளம்பரம் செய்துள்ளார்  இதனை உண்மை என நம்பி பலரும் அவரிடம் முதலீடு செய்துள்ளார்கள், பலரும் அவரிடம்முதலீடு செய்துள்ளார்கள், ஆரம்பத்தில் மக்களை நம்ப வைக்க பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். பணம் திரும்ப கிடைக்கின்றது என மீண்டும் 50, 100, 200 ஜடி என  ஏராளமானோர் லட்சக் கணக்கில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. 

ுறிப்பிட்ட 20 நாளில் அவற்றை திருப்பி வழங்காததால் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள். தன்மீதான புகாரை அறிந்த ஹேமலதா, அவரது கணவர் ரமேஷ், மற்றும் மார்டன் மாமி யூடியூப் சேனல் கேமராமேன் சங்கரன்கோவிலை சேர்ந்த அருணாசலம் ஆகியோர் தலைமறைவாகிவிட்டார்கள், அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திவந்த காவல்துறையினர் விளாங்குறிச்சி அருகே இருந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 45 சவரன் தங்கம், 1.75 கிலோ வெள்ளி, 7 மொபைல் போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் இவர்களால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்து வருகின்றனர்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback