நாளை 14 மணி நேரம் மின்தடை.. புதுச்சேரி மின்சாரத் துறை அறிவிப்பு.!!
அட்மின் மீடியா
0
புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 14 மணி நேரம் மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் நாளை 02.06.2023 பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என புதுச்சேரி அரசு மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
Tags: புதுச்சேரி செய்திகள்