மசூதி இடிக்க நோட்டிஸ்.. குஜராத்தில் வெடித்த கலவரம்...174 பேர் கைது முழுவிவரம் Gujarat Riot
குஜராம் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் மாஜிவாடி பகுதியில் மசூதி அரசு நிலத்தில் கட்டப்பட்டதாகவும், மசூதி சட்டப்படி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மசூதி இடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸை மசூதி முன்பு ஒட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் இரவு சுமார் 500க்கும் மேற்பட்டோர் மசூதி முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக மாறியது
கலவரத்தில் கற்கள் வீசப்பட்டு, வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு அப்போது போலீசார் வாகனம் உட்பட பொது சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டது இதையடுத்து போலீசார் தண்ணீர் குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை விரட்டினர்.
இந்த கலவரத்தில் ஒருவர் பலியானார். டிஎஸ்பி உட்பட 3 போலீசார்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக, 174 பேர் கைது செய்யப்பட்டனர்.இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்