Breaking News

சென்னை மாநகர பேருந்தில் பயணிக்க முதியோருக்கு ஜூன்21 முதல் டோக்கன்

அட்மின் மீடியா
0

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், சென்னைவாழ் முதியோருக்கு 21.06.2023 முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்திடும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜுன் 2023 வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது அடுத்த அரையாண்டிற்கு ஜுலை 2023 முதல் டிசம்பர் 2023 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்குரிய பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை  21 ஜுன் 2023 முதல் 31 ஜுலை 2023 வரை காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை வழங்கப்படும். 

சென்னைவாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback