வெளிநாட்டினரின் 66,854 டிரைவிங் லைசன்ஸ் ரத்து குவைத் அரசு அறிவிப்பு முழு விவரம்
குவைத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களால் பெறப்பட்ட 66854 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறப்புக் குழு ஆய்வுக்குப் பிறகு சட்டவிரோத உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குவைத்தில் பணி அனுமதி நிரந்தரமாக ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டினரின் 66,854 செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ்கள் ரத்து செய்யப்படுவதாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர்கள் கமிட்டி நடத்திய ஆய்வில், முதற்கட்டமாகக் குவைத்தில் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு 66,584 செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த அனைத்து உரிமங்களும் விதிமுறைகளின்படி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்கள் குவைத்துக்குத் திரும்பினால், அவர்கள் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில், மீண்டும் உரிமம் வழங்கும் செயல்முறையை புதிதாக தொடங்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது,
Tags: வெளிநாட்டு செய்திகள்