ஒரே ஒரு பாகுபலி சமோசா சாப்பிட்டால் 71,000 பரிசு எங்க தெரியுமா
12 கிலோ சமோசாவை அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு
உத்திரப்பிரதேசத்தில் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசாக வழங்கப்படுவதாக ஒரு பேக்கரி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் சுமார் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களுக்கு சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது
அதாவது யார் ஒருவர் 30 நிமிடத்திற்குள் இந்த 12 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசாவை
சாப்பிட்டு முடிக்கிறாரோ அவருக்கு 71000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று
அறிவித்துள்ளார்.
இந்த பாகுபலி சமோசாவின் விலை ரூ.1,500 ஆகும் இந்த சமோசாவில் உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலா ஆகியன 7 கிலோ அளவிற்க்கு வைக்கப்பட்டுள்ளது
கடையின் உரிமையாளர் சுபம் கவுசல் கூறுகையில், 12 கிலோ பாகுபலி சமோசா தயாரிக்க 6 மணி நேரம் ஆகும். வறுக்கவே ஒன்றரை மணி நேரம் ஆகும். பலர் தங்கள் பிறந்தநாளில் பாரம்பரிய கேக்கிற்கு பதிலாக 'பாகுபலி' சமோசாவை வெட்டுகிறார்கள். இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை எனவும்
யாரேனும் ஒரு வாடிக்கையாளர் நிச்சயம் இந்த சவாலில் வெற்றி பெறுவார் என
நம்புவதாக மேலும் முன்பதிவு செய்பவர்க்ளுக்கு மட்டுமே செய்யப்படுகிறது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்