Breaking News

நாளை உள்ளூர் விடுமுறை.! எந்த மாவட்டத்திற்க்கு தெரியுமா

அட்மின் மீடியா
0

ராமநாதபுரம், ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது இன்று மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி (நாளை) அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.வருடா வருடம் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. 



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். உலக புகழ் பெற்ற ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது. . 

இந்நிலையில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏா்வாடியில் அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தா்ஹா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆகவே வரும் 13 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்டப் பணியாளா்களோடு செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback