தடம் புரண்ட ஊட்டி மலை ரயிலின் கடைசிப் பெட்டி முழு விவரம்
அட்மின் மீடியா
0
தடம் புரண்ட ஊட்டி மலை ரயிலின் கடைசிப் பெட்டி முழு விவரம்
நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் திடீரென தடம் புரண்டது. ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுக்கொண்டிருக்கும்போது விபத்து நேர்ந்ததாக சொல்லப்படுகிறது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்