தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா அவதூறு வழக்கில் நள்ளிரவில் கைது
தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராக எஸ்.ஜி. சூர்யா அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார், டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டிருந்தார் என கூறப்படுகின்றது இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.15 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த அவரை மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரின் கைதையறிந்த பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கைதான எஸ்.ஜி. சூர்யாவை மதுரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்