Breaking News

உத்திரபிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வில் காதில் சிறிய புளுடூத் உடன் தேர்வு எழுதிய நபர் கைது வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரப் பிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து அலுவலர், சமூக நலத்துறை மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வில், காதில் புளூடூத் கருவி மாட்டிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர் தனிப்படையினர்! அவரின் காதில் இருந்து புளூடூத் கருவியை அகற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகின்றது



உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில், கிராம வளர்ச்சி அலுவலர் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில்

விஞ்ஞான ஹைடெக் முறையில் ஒருவர் தன் காதில் புளூடூத் கருவியை அணிந்திருந்தார். இதன் மூலம், வெளியில் உள்ள சக ஊழியர்களிடம் வினாத்தாள்கள் மற்றும் தேர்வு தொடர்பான பிற தகவல்களைச் சென்று கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொண்டு தேர்வில் இருந்துள்ளார்

ஆனால் அவரின் காதில்  உள்ள புளூடூத் யார் கண்ணுக்கும் தெரியமால் மிகசிறிய அளவில் இருந்துள்ளது, அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பு அதிகாரி சோதனையில் அவரின் காதில் இருந்த புளூடூத் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/sirajnoorani/status/1673424086352166913

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback