கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன முழு விவரம்
நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும்10 ம் வகுப்பு மற்ரும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெறது.
இந்த விழாவிற்கு வருகை புரிந்த நடிகர் விஜய் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்தார். அதனைத்தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார் நடிகர் விஜய்
இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகளே, தற்போது பொறுப்பு வந்துள்ளதாக உணர்கிறேன் உங்களை பார்க்கும் போது எனது பள்ளி நினைவுகள் நினைவுக்கு வருகிறது. நான் படிக்கும்போது ரொம்ப சுமார்தான்.
நான் ஒரு திரைப்படத்தில் பார்த்தேன் அந்த வசனம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது. நம்மிடம் காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். பணம் இருந்தால் பிடிங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் அவர்களால் எடுக்க முடியாது. என கூறிய அவர் நீங்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்த உங்களது ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நண்பர்களுக்கும், அதன் தலைவர் ஆனந்த் அண்ணனுக்கும் நன்றிகள்.
நாளைய இளம் வாக்காளர்களே நீங்கள் தான் நல்ல தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் தான் வரும் வருடங்களில் வாக்களிக்க உள்ளீர்கள்.நமது கையை வைத்து நம் கண்ணையே குத்தும் நிலை தான் நடக்கிறது. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தான் நான் குறிப்பிடுகிறேன்.
ஒருவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு தொகுதிக்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவாகும். அப்படி என்றால் அந்த 15 கோடியை அவர்கள் முன்னாடியே எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். இனி காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் என்று உங்கள் அம்மா அப்பாவிடம் சொல்லுங்கள் என அறிவுறுத்தினார்.
மேலும் முழுமையான கல்வி என்பது ஐன்ஸ்டீன் சொன்னது போல நாம் படித்த படிப்பு எல்லாம் மறந்த பிறகு நாம் நினைவில் எது இருக்கிறதோ அதுதான் நாம் படித்த கல்வி என கூறினார். அது சில காலம் கழித்து தான் எனக்கு புரிந்தது.
உங்களது கல்வி என்பது உங்களது பண்பு மற்றும் சிந்திக்கும் திறனை சார்ந்தது. உங்கள் பணம் இழந்தால் ஒன்றுமே நீங்கள் இழக்கவில்லை. உடல் நலம் இழந்தால் ஏதோ ஒன்றை இழந்து உள்ளீர்கள். ஆனால் உங்களுடைய குணத்தை இழந்தால் அனைத்தும் இழந்து விட்டீர்கள் என்றே அர்த்தம்.
தற்போது 12வது முடித்து அடுத்து கல்லூரி படிப்பை தொடர உள்ளீர்கள். இப்போது ஹாஸ்டல், கல்லூரி, புது புது நண்பர்கள் என உங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பண்பை, குணத்தை இழந்து விடாதீர்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். அதேபோல் நமது வாழ்க்கை நம் கையில் தான் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
அதேபோல் உங்கள் வீட்டருகே உங்கள் பகுதியில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படி தேர்ச்சி பெற்றீர்கள் படிப்பை சொல்லிக் கொடுத்து அவர்களை தேர்ச்சி பெற வைத்தால் அதுவே நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. என பேசினார்
Tags: தமிழக செய்திகள்