Breaking News

பைக் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு ஹெல்மட் கட்டாயம் மாநகர போலீசார் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

கோவை மாநகரில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவிப்பு!


இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்:-

இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் உயிரிழக்கின்றாகள்.

எனவே 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே வருகிற 26-ந் தேதி முதல் நகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களைபயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback