Breaking News

தமிழக அரசு இசேவை மையம் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் how to start government e sevai maiyam

அட்மின் மீடியா
0

 தமிழக அரசு இசேவை மையம் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் how to apply e sevai maiyam in tamilnadu


தமிழகத்தில் படித்த இளைஞர், தொழில் முனைவோரை ஊக்கு விக்கும் விதத்தில், அனைவருக்கும் 'இ - சேவை மையம்' திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. 

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் இல்லாத கிராம, நகர்ப்புறங்களில், படித்த இளைஞர்கள், தொழில் உள்ளன. முனைவோர் அம்மையத்தை துவக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு வார்டிலும் தலா ஒரு இ சேவை - மையம்' துவக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

மாநில அளவில் இந்த மையங் களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் பல்வேறு சேவைகளை செய்ய உள்ளனர். மின் ஆளுமை முகமை, அரசு கேபிள் டிவி நிறுவ னம், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராம தொழில் முனை வோர் மூலம் இச்சேவை கம்ப்யூட்டர், களை மக்களின் இருப் பிடத்திலேயே கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்த மையங்கள் திறக்கப்படவிரும்புவோர் ஜூன், 30 இரவு, 8:00 மணிக்குள் http:// www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

புதிதாக துவங்கும் இ சேவை மையங்களில், பிரின்டர், ஸ்கேனர், பயோமெட்ரிக் உள்ளிட்ட பொருட்களை வைத்திருக்க வேண்டும். 

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். - கம்ப்யூட்டர் இயக்குவதில் நல்ல அறிவு, தமிழ், ஆங்கில மொழி சரளமாக பேச, எழுத தெரிய வேண்டும். அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். தடையற்ற இணைய வசதி பெற்றிருக்க வேண்டும். எட்டு மணி நேரம் செயல்பட வேண்டும் என, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது

படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் ஒரு இ சேவை மையத்தை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். 

தமிழகத்தின் தொலைதூர எல்லைகளுக்கும் இ-சேவைகளை எடுத்துச் செல்வதன் மூலம் மாநிலம் முழுவதும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் மைய நோக்கமாகும். அதே நேரத்தில் குடிமக்களுக்கு இது ஒரு சாத்தியமான தொழில்முனைவு வாய்ப்பாக அமைகிறது. 

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ -சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள்(PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர்(VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. 

இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து (tnesevai.tn.gov.in/) இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்க “அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில்” பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பித்திருந்த தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இ சேவை மையம் எப்படி தொடங்கலாம் என்று பார்ப்போம்:-

இ-சேவை மையத்தை நடத்த ஓர் கம்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், பயோமிட்ரிக் கருவி, வெப் கேமரா, இணைய வசதி, மற்றும் கணினி அறிவும், தமிழ் ஆங்கிலம் டைப்பிங் தெரிந்தாலே போதுமானது.

Community Certificate,

Widow Certificate, 

Widow Pension, 

Native Certificate, 

First Graduate Certificate 

சிட்டா / பட்டா, 

வில்லங்க சான்று

பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்துதல் (PMFGY),

ஓய்வூதியம் விண்ணப்பித்தல்

வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல், விவரங்களை திருத்தம் செய்தல்,

வருவாய்த்துறை சான்றிதழ்கள்,

திருமண உதவிதொகை, 

குழந்தை பாதுகாப்பு திட்டம்,

இணையவழி பட்டா மாற்றம், 

தற்காலிக பட்டாசு உரிமம், 

இ-அடங்கல், 

மின் கட்டணம் செலுத்துதல், 

பட்டா / சிட்டா /புலப்படம், 

குடும்ப அட்டை திருத்தங்கள், 

பிறப்பு/இறப்பு சான்றிதழ் எடுத்தல்

மாநகராட்சி/நகராட்சி குடிநீர்/சொத்து/தொழில் வரி செலுத்துதல்,

போன்ற ஆவணங்களை இ சேவை மையம் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் 

விண்ணப்பிக்க:-

https://www.tnesevai.tn.gov.in/CSConlineReg_SchemeandRole.aspx

விண்ணப்பிப்பது எப்படி:-

மேல் உள்ள லின்ங் சென்று உங்கள் மொபைல் எண் பதிவு செய்து அதன்பின்பு வரும் ஒடிபியை பதிவு செய்யுங்கள்

அடுத்து உங்கள் பெயர் , முகவரி  போன்றவைகளை சரியாக பதிவிடுங்கள்

அடுத்து உங்கள் கடை பற்றிய விவரங்களை சரியாக பதிவிட்டு உங்கள் படிப்பு விவரங்களையும் அதில் சரியாக கொடுக்கவும்

அதன் பின்பு உங்கள் வங்கி கணக்கை பதிவிடுங்கள்

அதன்பின்பு அதில் உங்கள் ஆதார், பான் கார்டு கடை புகைப்படம் அப்லோடு செய்யுங்கள் 

அதன்பின்பு கட்டணம் கட்டிவிட்டால் போதும் அவ்வளவுதான்

விண்ணப்ப கட்டணம்:-

கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3000 

மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும். 

இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்-லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்க்குறிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். 

விண்ணப்பத்திற்கான கடைசி நாள் :-

30.06.2023

Tags: முக்கிய செய்தி வேலைவாய்ப்பு

Give Us Your Feedback