Breaking News

கனமழை காரணமாக இன்று 06.07.2023 பள்ளிகள் விடுமுறை எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.என வானிலை ஆய்வு மையம்தெரிவித்திருந்தது




இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை காரணமாக இன்று மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக  (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ,குன்னூர், கோத்தகிரி ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

குறிப்பு:- வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback