நாளை முதல் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை!
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோருக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 60க்கு தக்காளிகள் விற்கப்பட உள்ளன. வடசென்னையில் 32 கடைகள் , மத்திய சென்னை 25 கடைகள் , தென்சென்னை 25 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றார்.
Tags: தமிழக செய்திகள்