Breaking News

தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் எங்கு உள்ளது, முகவரி, தொடர்பு எண் ஆன்லைனில் புக் செய்வது எப்படி முழு விவரம் govt Working Women's Hostels

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசின் 'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' சார்பில் சென்னை,செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை,தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன

24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 

இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உள்ளதால் பல இளம் பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு நகரங்களுக்கு வேலைக்கு செல்ல ஆர்வம் கொள்கின்றனர். 



விலைவாசி உயர்வு மற்றும் அதிக வாடகை காரணமாக அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு, பணி நிமித்தம் புதிய இடங்களில் செலவுகளைக் சமாளிப்பது கடினம் ஆகும். 

இதுபோன்ற பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் 28 பணிபுரியும் மகளிர் விடுதிகளை நடத்தி வருகிறது.

சென்னையில் மாதம் ரூ.25,000 மற்றும் பிற இடங்களில் ரூ 15,000 வரை சம்பளம் பெறும் பெண்கள் இந்த பணிபுரியும் பெண்கள் விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள். 

தமிழ்நாடு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNWWHCL) தமிழ்நாடு அரசால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியாக நிறுவப்பட்டது. 

TNWWHCL சிறந்த சேவைகளை வழங்க பாடுபடுகிறது மற்றும் மலிவு விலையில் ஒரு புதிய வாழ்க்கை அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது.

TNWWHCL ஆனது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகளை உருவாக்கி, நவீன வசதிகளுடன் கூடிய நல்ல இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் வாழும் இடங்களை வழங்குகிறது.தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் அறைகளின் பதிவு மற்றும் முன்பதிவு இந்த லின் கே மூலம் செய்யப்படலாம் . உள்நுழைவு மூலம் பணம் செலுத்துதல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறலாம் .

94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம்

விடுதி சிறப்பம்சங்கள்:-

  • 24*7 பாதுகாப்பு வசதி
  • பார்க்கிங் வசதி
  • பயோ-மெட்ரிக்
  • இலவச WI-FI

  • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
  • பொழுதுபோக்கு அம்சங்கள்
  • அயனிங் வசதி
  • கெய்சர் வசதி
  • க்ரீச்
  • சுகாதாரமான கழிவறை
  • பான்ட்ரி
  • படிக்கும் அறை

ஆன்லைனில் புக் செய்ய:-

https://www.tnwwhcl.in/


தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கப்பட்டுள்ளது அதன் முகவரி:-

Tambaram Working Women's Hostel

No.8 , Nirmal Garden,Home Road,

Judge Colony, Tambaram Sanatorium, 

Chengalpattu, Tamil Nadu, 600047, 

Guduvancheri Working Women's Hostel

No.6, 4th street, Defence Colony, 

Nellikuppam Road, (Next To Sub-Register Office), 

Nandhivaram, Guduvancheri, 

Chengalpattu, Tamil Nadu, 603202, 

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கப்பட்டுள்ளது அதன் முகவரி:-

Adyar Working Women's Hostel

2nd Cross Street , 

Shastiri Nagar, 

Near Adyar, Depot 

Adyar,

Chennai, Tamil Nadu, 600020, 

Vadapalani Working Women's Hostel

Anna Street, Kumaran Colony, 

Vadapalani, Chennai, 

Tamil Nadu, 600126, 

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்

Perambalur Working Women's Hostel

Near New Bus Stand, 

Back side of District Central Library, 

Ceylone Colony, 

Thuraimangalam, 

Perambalur, 

Tamil Nadu, 621212

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்

Salem Working Women's Hostel 

27/12, 13, Bodinaickenpatti, 

Suramangalam, Salem, 

Tamil Nadu, 636005, India

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்

Thanjavur Working Women's Hostel

South Street, 

Melavasthachavadi, 

Pudukkottai Road, 

Thanjavur, Tamil Nadu, 613005,

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்

Trichy Working Women's Hostel

No:33/9 , Block -3, Abishekapuram Village, 

Ponmalai, Thiruchirappalli, 

Tamil Nadu, 621601, India

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்

Tirunelveli Working Women's Hostel

New Colony Street, 

Veera Manikkapuram, 

Palayamkottai, 

Tirunelveli, 

Tamil Nadu, 627002

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்/

Vellore Working Women's Hostel

No. 6 , Rajiv Gandhi Nagar, 

Allapuram, 

Thorapadi, Vellore, 

Tamil Nadu, 632002,

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்

Villupuram Working Women's Hostel

Subramaniya Siva Nagar, Ellis Chathiram Road,, 

Vazhudhareddy, 

Villupuram, Tamil Nadu, 605602, 











Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback