சந்திரயான் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ
சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 19ம் தேதி எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது
இஸ்ரோதரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது விக்ரம் லேண்டர்வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்கலத்தை கடந்த ஜூலை, 14ம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது.
பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைந்து வந்தது.
இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதுஇந்நிலையில் நேற்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டர் ஆக.23-ல் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வரும் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவிப்பு!!
பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!!இந்நிலையில் விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
தற்போது லேண்டர் தரையிறங்கும் போது பாறாங்கற்கள் அல்லது ஆழமான அகழிகள் இல்லாமல் அதரையிறங்குவதர்க்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
டிடி நேஷனல் டிவியில் ஆகஸ்ட் 23ம் தேதி 17:27 மணி (5.27 மணி) முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
அதன் நேரலையை கீழ் உள்ள் லின்ங்கை கிளிக் செய்து பார்க்கலாம்
https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss
Tags: இந்திய செய்திகள்