ஹெச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அறநிலைத்துறையையும், அறநிலைத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாகவும் மேலும், பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், அதே போல் கனிமொழி எம்.பி. குறித்து தவறாக பேசியதாகவும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவர் தொடர்பான வழக்குகளை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்