Breaking News

நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டர் எடுத்தனுப்பிய முதல் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!

அட்மின் மீடியா
0

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக ஆகஸ்ட் 23 அன்று தரையிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 லேண்டர் மாட்யூல் நிலவின் மேற்பரப்பைத் தொட்ட பிறகு எடுத்த முதல் படத்தைப் பகிர்ந்துள்ளது.

படத்தில் சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தில் ஒரு காலுடன் மற்றும் அதன் நிழல் படத்தில் தெரிவதை காட்டுகிறது . “சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் தட்டையான பகுதியைத் தேர்ந்தெடுத்தது” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பிறகு விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் சமதள புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. மேலும் நிலவின் சமதள பகுதியை தேர்வு செய்து பத்திரமாக லேண்டர் தரையிறங்கியதாக இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இந்த புகைப்படம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டிங் இமேஜர் கேமராவால் படம் பிடிக்கப்பட்டது. இது சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. புகைப்படத்தில் லேண்டரின் ஒரு கால் மற்றும் அதனுடன் இணைந்த நிழல் தெளிவாக தெரிகிறது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback