BREAKING NEWS வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் குறைப்பு! – மத்திய அரசு அறிவிப்பு
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
மேலும் குறைக்கப்படும் ரூ.200-ஐ எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக மத்திய அரசே வழங்கும் என்றும் இதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படுகிறது. சென்னையில் 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.1,118க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரூ.1,118 ஆக உள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை இனி ரூ.918க்கு விற்பனை செய்யப்படும்
Tags: இந்திய செய்திகள்