Breaking News

விண்வெளியில் உள்ள வீரர்கள் தாகம் எடுத்தால் தண்ணீர் எப்படி குடிப்பார்கள் நீங்களே இந்த வீடியோ பாருங்க how to drink water in space Sultan AlNeyadi

அட்மின் மீடியா
0

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள், தண்ணீர் எப்படி குடிப்பார்கள் என்பதை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார் UAE வீரர் சுல்தான் அல் நெயாடி!



நம் பூமியில் உள்ளது போல் விண்வெளியில் நாம் இருக்கமுடியாது அதே போல் அங்கு புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அங்கு அனைத்தும் மிதக்கும் என்பதால் விண்வெளிக்கு அணுப்பபடும் வீரர்களுக்கு இங்கேயே அனைத்து பயிற்ச்சிகளும் தரப்படும் 

விண்வெளி புவிஈர்ப்பு இல்லாத பகுதி அங்கே பூமியில் சாப்பிடும் உணவுகளை அப்படியே எடுத்து செல்ல முடியாது காரணம் விண்கலத்தில் சிதறும் உணவுகள் கிழே விழுகாது அந்தரத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கும்.

இப்படி சுற்றிக்கொண்டு இருக்கும் உணவு துகள்கள் விண்கலத்தில் சிக்கி அதனால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவ்வளவு ஏன் பெரும் விபத்தை கூட ஏற்படுத்தலாம். இது விண்வெளி வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது

விண்வெளி நிலையத்தில் அனைத்துமே மிதக்கும் என்பதால் அங்கே தட்டோ, கிண்ணமோ கிடையாது.அங்கே சாப்பிடும் உணவு, அவற்றின் எடையைக் குறைக்கும் வகையில் மிகவும் பதப்படுத்தப்பட்டதாக இருக்கும். 

உணவுப் பொருள்களில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டிருக்கும். சாப்பிடுவதற்கு முன்பாக, உணவை வெந்நீர், தண்ணீர் தெளிப்பானில் காட்டி ஈரமாக்கி உண்பார்கள்.

அதேபோல் தான் தண்ணீரை அவ்வளவு சுலபமாக குடிக்க முடியாது பாட்டிலை திறந்தால் அது வெளியே வந்துவிடும். புவியீர்ப்பு விசை இல்லாமல் தண்ணீர் குடிப்பது எப்படி?ஆம். தண்ணீர் பாட்டிலிலிருந்து ஒரு குமிழி தண்ணீரைப் பிழிந்து, அதனை உறிஞ்சி, தண்ணீரை விழுங்குவார்கள். 

இது குறித்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அமீரக வீரர் சுல்தான் அல் நெய்மாடி தண்ணீர் குடிப்பது எப்படி என வெளியிட்ட வீடியோ பார்க்க

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Astro_Alneyadi/status/1695097099497435616

When we pour water here, it will not fall due to the minimal effect of gravity aboard the ISS. 💧Nevertheless, this doesn't prevent water or food from reaching our stomachs, thanks to the esophageal muscle contractions that push drinks and food downwards.

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback